/

குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கக் கோரி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை

விருதுநகரில் குண்டும் குழியுமான சாலையை உடனே சீரமைக்கக் வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:24 pm

எஸ். பாண்டியன்

விருதுநகரில் குண்டும் குழியுமான சாலையை உடனே சீரமைக்கக் வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகராட்சியில் 22-வார்டு உறுப்பினர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். இதில், விருதுநகரில் மாரியம்மன் கோவில் முதல் பாவாலி சாலை வரையில் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூராக இருக்கிறது. எனவே இச்சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் நேந்திராதேவி உள்ளிட்ட அலுவலர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை அடுத்து கலைந்து சென்றனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மாவட்ட குழு உறுப்பினர் ஜெயசந்திரன் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.