இம்மாவட்டத்தில் மொத்தம் 1.50 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் உள்ளது. இதில், தற்போது 1.20 ஆயிரம் ஹெக்டேரில் கிணற்றுப் பாசனம் மற்றும் மானாவாரி விவசாயமும் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் பெய்த மழையை அடுத்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் அனைவரும் தானிய விதைப்பு பணிகளை ஆர்வத்துடன் மேற்கொண்டனர்.அதிலும், விருதுநகர் வட்டார பகுதிகளான ஆமத்தூர், செவல்பட்டி, விருதுநகர் பகுதியில் வடமலைக்குறிச்சி, சின்னமூப்பன்பட்டி, வெள்ளூர், குமாரபுரம், இனாம்ரெட்டிபட்டி, மருளூத்து, வாய்ப்பூட்டான்பட்டி, வி.முத்துலிங்காபுரம், ஒண்டிப்புலிநாயக்கனூர், வடமலாபுரம், செங்குன்றாபுரம், புதுக்கோட்டை, சங்கரலிங்காபுரம், முத்துலாபுரம், சீனியாபுரம், எரிச்சநத்தம், எல்கைபட்டி, குந்தலப்பட்டி, எலிங்கநாயக்கன்பட்டி மற்றும் செங்ககோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கம்பு, இரும்புச்சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு, பாசிப்பயறு, மொச்சை, குதிரைவாலி மற்றும் தட்டைப்பயறு உள்ளிட்ட பல்வேறு தானியப்பயிர்களை விளைநிலங்களில் விதைத்தனர்.