மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ஒடுக்கத்தூர் அருகே மின்சாரம் தாக்கி மாணவர் சாவு :  பொதுமக்கள் சாலை மறியல்

ஒடுக்கத்தூர் அருகே மின்சாரம் தாக்கி மாணவர் ஒருவர் வியாழக்கிழமை இறந்தார்.  பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :17 அக்டோபர் 2013, 5:37 pm

ஒடுக்கத்தூர் அருகே மின்சாரம் தாக்கி மாணவர் ஒருவர் வியாழக்கிழமை இறந்தார்.  பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒடுகத்தூர் அருகே வெங்கனபாளையம் கிராமத்தை சேர்ந்த கோபியின் மகன் சத்திவேல்(16).  இவர் ஒடுகத்தூர் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.  சம்பவத்தன்று காலை அங்குள்ள பொது குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் இறைப்பதற்காக அங்கிருந்த மோட்டார் ஸ்விட்சை இயக்கியுள்ளார்.  அப்போது மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

அதனைத் தொடர்ந்து பம்ப் ஆபரேட்டரை நியமிக்காமல் இருப்பதை கண்டித்தும், ஏற்கனவே மின்சார கசிவு பிரச்சனை இருப்பதை சுட்டிகாட்டியும் அதை சரிசெய்யாமல் இருந்ததை கண்டித்தும் பொதுமக்கள் ஒடுக்கத்தூர் - வேலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

வேலூர் வட்டாட்சியர் சாந்தி, வருவாய் கோட்டாட்சியர் சண்முகசுந்தரம், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் மு. கலையரசு ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

மாணவர் மின்சாரம் பாய்ந்து இறந்தது குறித்து வேப்பங்குப்பம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.