எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கடலூரில் இருந்து கோவைக்கு பயணிகள் ரயில்: கே.எஸ்.அழகிரி தகவல்

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி. கடலூரில் இருந்து விருத்தாசலம் வழியாக கோவைக்கு பயணிகள் ரயில் விடுவதற்கு தேவையான முயற்சியில் ஈடுபட்டு

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:16 pm

பெ. விஜயபாஸ்கர்

கடலூரில் இருந்து கோவைக்கு பயணிகள் ரயில் விடுவதற்கு முயற்சி மேற்கொண்டு வருவதாக கடலூர் எம்.பி கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி. கடலூரில் இருந்து விருத்தாசலம் வழியாக கோவைக்கு பயணிகள் ரயில் விடுவதற்கு தேவையான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இந்தியாவிலேயே ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளின் விகிதாச்சாரம் குஜராத்தில் தான் அதிகம் உள்ளது. இது ஒன்றே அங்கு அடிப்படை வசதிகள் இல்லை என்பதை தெளிவுபடுத்தும்.

இந்தியா, சீனாவிற்கு இணையாக வளர்ந்து கொண்டிருக்கும் நாடு. தற்பொழுது எழுந்துள்ள தற்காலிக பொருளாதார பின்னடைவு நிரந்தரமானது அல்ல. அவற்றை நாம் வெற்றி கொள்வோம். மீனவர் பிரச்சினையில் தீர்வு காண தமிழக அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசும், இந்திய அரசும் இரு நாட்டு மீனவர்களை சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று கொண்டுள்ளன. தமிழக அரசு மனது வைத்தால் பிரச்சினைக்கு எளிதாக தீர்வு காண முடியும்.

நவம்பர் மாதத்தில் மத்திய அமைச்சர் சிதம்பரம் நெய்வேலியில் தானே புயலில் பாதிக்கப்பட்ட முந்திரி, பலா, தென்னை, சவுக்கு விவசாயிகளுக்கு பொதுத்துறை வங்கிகள் மூலம் ரூ.600 கோடி வழங்க உள்ளார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.