மதுரை மருத்துவமனையில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள்
மதுரை ஒத்தக்கடைப் பகுதியை ஒட்டிய வவ்வால்தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் அய்யன் சரவணக்குமார். கூலித்தொழிலாளியான இவரது மனைவி அன்னலட்சுமி (30). இந்தத் தம்பதிக்கு ஏற்கெனவே


மதுரை ஒத்தக்கடைப் பகுதியை ஒட்டிய வவ்வால்தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் அய்யன் சரவணக்குமார். கூலித்தொழிலாளியான இவரது மனைவி அன்னலட்சுமி (30). இந்தத் தம்பதிக்கு ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பிரசவத்துக்காக வியாழன் இரவு மதுரை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்னலட்சுமிக்கு இன்று காலை 3 ஆண் குழந்தைகள் பிறந்தன. ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள் பிறந்ததால் மருத்துவமனையில் பலரும் ஆச்சரியப்பட்டு பார்த்துச் சென்றனர். குழந்தைகள் மூன்றும், தலா 2.3 கிலோ, 2.4 கிலோ, 2 கிலோ என்ற எடைகளில் இருந்தன. இருப்பினும் மூன்று குழந்தைகளும் சிசுநலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தக் குழந்தைகளை பெண்ணின் உறவினர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்துச் சென்றனர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.
மருத்துவமனை டீன் மோகன்., உறைவிட மருத்துவ அலுவலர் திருவாய்மொழிப் பெருமாள் ஆகியோரின் மேற்பார்வையில், மருத்துவர் குழு குழந்தைகளைக் கண்காணித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...