மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கருப்பசாமி பாண்டியன் மீது புகார் கூறிய பெண்ணின் தம்பி தற்கொலைக்கு முயற்சி

திருநெல்வேலி நகரப் பகுதியைச் சேர்ந்த திமுக இலக்கிய அணி நிர்வாகி கு. நாலடியார். இவரது மகள் தமிழரசி, திமுக மாவட்ட செயலர் கருப்பசாமி பாண்டியன் மீது கடந்த மாதம் டிஐஜி-யிடம் புகார் அளித்தார். இந்த வழக்கு

Updated On :3 அக்டோபர் 2013, 11:06 am

கருப்பசாமி பாண்டியன் மீது புகார் கூறிய பெண்ணின் தம்பி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி நகரப் பகுதியைச் சேர்ந்த திமுக இலக்கிய அணி நிர்வாகி கு. நாலடியார். இவரது மகள் தமிழரசி, திமுக மாவட்ட செயலர் கருப்பசாமி பாண்டியன் மீது கடந்த மாதம் டிஐஜி-யிடம் புகார் அளித்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், தானும் தனது தம்பி குறளமுதன், தந்தை நாலடியார், தாய் காந்திமதி ஆகியோர் குடும்பத்துடன் திமுக-விலிருந்து விலகுவதாக கடந்த 28ஆம் தேதி தமிழரசி தெரிவித்தார்.

இந்த நிலையில்,  வியாழக்கிழமை தமிழரசியின் தம்பி குறளமுதன் (29), விஷம் குடித்த நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இவர், திருநெல்வேலி பாரதியார் தெருவில் மனைவி கஸ்தூரி மற்றும் மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.இவரை கருப்பசாமி பாண்டியனின் ஆதரவாளர் ஒருவர் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மிரட்டி வந்தாராம். மேலும், புதன்கிழமை இரவு கொக்கிரகுளம் அருகே குறளமுதனிடம் பேசிய அந்த ஆதரவாளர், குறளமுதனின் மனைவி தொடர்பாக தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த குறளமுதன், வீட்டிலிருந்த காலாவதியான 3 மருந்துபாட்டில்களை எடுத்துக் குடித்து விட்டாராம். உடல்நலம்பாதிக்கப்பட்ட அவரை உறவினர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த திருநெல்வேலி நகரப் போலீஸார் குறளமுதனிடம் வாக்குமூலம் பெற்றனர். வாக்குமூலத்தில் அவர் குறிப்பிட்ட  நபர் தொடர்பாக விசாரணை நடத்தவுள்ளதாகவும், அதன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.