/

மதுரை: பணிநீக்கப்பட்ட வருவாய் ஆய்வாளர் தற்கொலை முயற்சி

மதுரை ரயிலார் நகரைச் சேர்ந்தவர் செந்தில் (34). மதுரை கோட்டாட்சியர் அலுவலக முதுநிலை எழுத்தர் மற்றும் வருவாய் ஆய்வாளர். இவர் சிவகாசியைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் கடன்

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:02 pm

ஜெயப்பாண்டி

பணிநீக்கப்பட்ட வருவாய் ஆய்வாளர் தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை சேர்க்கப்பட்டுள்ளார்.

  மதுரை ரயிலார் நகரைச் சேர்ந்தவர் செந்தில் (34). மதுரை கோட்டாட்சியர் அலுவலக முதுநிலை எழுத்தர் மற்றும் வருவாய் ஆய்வாளர். இவர் சிவகாசியைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. அதற்காக மாதம் வட்டியும் கட்டியதாகத் தெரிகிறது. இதற்கிடையே அவர் மீது புகார் எழுந்ததைத் தொடர்ந்து பணிநீக்க நடவடிக்கைக்கும் ஆளாகியுள்ளார்.

  இந்நிலையில், கொடுத்த பணத்தை சம்பந்தப்பட்ட தொழிலதிபர் தரப்பினர் கேட்டுள்ளனர். இதுதொடர்பாக திருநகரில் தனது நண்பர்களிடம் செந்தில் பேசியுள்ளார். ஆனால், குறிப்பிட்ட தேதிக்குள் பணம் கொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் மனமுடைந்து அளவுக்கதிகமாக மாத்திரை சாப்பிட்டு மயங்கியுள்ளார். இதையடுத்து அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். இதுகுறித்து திருநகர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.