தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மகளிர் திட்டம் சார்பில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட மகளிர் திட்டம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை வருகிற டிச.4-ம் தேதி நடத்தப்பட

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:02 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்ட மகளிர் திட்டம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை வருகிற டிச.4-ம் தேதி நடத்தப்பட இருக்கிறது.

இது குறித்து மகளிர் திட்ட அலுவலர் பிச்சை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

இந்த முகாம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி வளாகத்தில் குறிப்பிட்ட நாளில் காலை 10-மணிக்கு தொடங்கி, தொடர்ந்து மாலை 4 மணி வரையில் நடைபெற இருக்கிறது. இந்த முகாமை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்து தொடங்கி வைக்கவும் உள்ளார்.இதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று பணியாளர்கள் மற்றும்  தொழிலாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். அதனால் குறைந்தது 10-வது தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் படித்த இருபாலரும் தங்கள் அசல் சான்றிதழ்கள், தொழில் பயிற்சி கல்வி சான்றிதழ்கள், குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் மற்றும் மாற்றுச்சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும். எனவே வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மகளிர் திட்ட அலுவலர் பிச்சை கேட்டுக் கொணடுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.