மதுரை பொதுப்பணித்துறை ஓய்வு பெற்ற அலுவலர் வீட்டில் 25பவுன் நகை ரூ.49 ஆயிரம் பணம் திருட்டு
மதுரையில் நேற்று இரவு ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் கொள்ளைச்சம்பவம் நடந்துள்ளது.


மதுரையில் நேற்று இரவு ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் கொள்ளைச்சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து போலீச்தரப்பில் கூறும் போது மதுரை பசுமலை பைக்காரா பகுதியில் உள்ள அழகுசுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாமலைச் சாமி. ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரியான இவர் சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் ஐஐடியில் விரிவுரையாளராக உள்ள தன் மகனை பார்க்க சென்றார்.
இதையடுத்து நேற்று இரவு பூட்டை உடைத்து வீட்டினுள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் 49 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர்.
இது குறித்து சுப்பிரமணிய புரம் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...