திருச்சுழி அருகே ஆலடிபட்டி கிராமத்தை சேர்ந்த ராஜன் மகள் ஜான்மேரி(17). இவர் அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்லூரணி அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்2 வகுப்பு படித்து வருகிறார். அதேபோல், இக்கிராமத்தைச் சேர்ந்த சி்க்கந்தர் மகள் நிஷாபேகம்(11) 6-ம் வகுப்பும், பொன்னையா மகன் இஸ்ரவேல்(16) 11-ம் வகுப்பும், ஜான்சிராணி(13), ராஜூமேரி(13), அந்தோணியம்மாள்(15), பொன்மணி(14), ஆரோக்கியஜெயா(14), சுபலட்சுமி(13), மலர்கொடி(16), ஜனககாமராஜ்(11), செல்வமணி(13) மற்றும் தமிழ்மணி(14) உள்ளிட்ட 18 மாணவ, மாணவிகளும் இதே பள்ளியில் படித்து வருகின்றனர்.