அருப்புக்கோட்டை அருகே குளத்தில் மூழ்கி 5 மாணவிகள் பலி
திருச்சுழி அருகே நீச்சல் தெரியாமல் ஊரணியில் மூழ்கி ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 பள்ளி மாணவிகள் சகதிக்குள் சிக்கி உயிரிழந்தனர். இச் சம்பவத்தினால் அக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரையும்


திருச்சுழி அருகே நீச்சல் தெரியாமல் ஊரணியில் மூழ்கி ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 பள்ளி மாணவிகள் சகதிக்குள் சிக்கி உயிரிழந்தனர். இச் சம்பவத்தினால் அக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே போத்தம்பட்டி ராமநாயக்கர் ஊரணி உள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகள்களான 8-வது வகுப்பு மாணவி மாதரசி(13), இவரது சகோதரரி 3-ம் வகுப்பு மாணவி ரம்யா(8),ஷண்முகராஜின் மகளான 6-ம் வகுப்பு மாணவி ரம்யா(11), கோபால்ராஜின் மகளான 3-ம் வகுப்பு மாணவி கலைச்செல்வி(8) மற்றும் இதே ஊரைச் சேர்ந்த பொன்மணி(8) உள்ளிட்ட 7 பேர் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் துணி துவைத்து குளிப்பதற்காக சென்றனர். அங்கு துணிகளை துவைத்து விட்டு குளிக்கச் ஓரமாக நின்று குளித்த போது சகதி வழுக்கி உள்ளே மூழ்கியுள்ளார். அதையடுத்து, காப்பாற்றுவதற்காக ஒவ்வொரு மாணவிகளாக காப்பாற்றுவதற்காக உள்ளே சென்று 6 பேர் மூழ்கியுள்ளனர்.
இதையடுத்து, மூழ்கி கொண்டிருப்பதை அறிந்ததும் இதே கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி கார்த்திகா கிராம மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் விரைந்து வந்த கிராம மக்கள் தண்ணீருக்குள் குதித்து மூழ்கிய மாணவிகளை மீட்டனர். இதில், கடைசியாக காப்பாற்றச் சென்ற மூழ்கிய மாணவி சங்கீதா(8) மட்டும் உயிருடன் மீட்டனர். இதில், சகோதரிகளான ரம்யா, மாதரசி, மற்றொரு ரம்யா, கலைச்செல்வி மற்றும் பொன்மணி ஆகியோர் சகதிக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் உயிரிழந்த மாணவிகளின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக ஏற்றினர். அதற்கு கிராம மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து தகவலறிந்த ஆட்சியர் டி.என்.ஹரிஹரன், அருப்புக்கோட்டை வட்டாட்சியர் சந்திரசேகரன், கோட்டாட்சியர் உதயகுமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு மாணவிகளின் சடலங்களை பிரேத பரிசோதனை செய்யக் கூடாது எனக் கூறி கிராம மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். பின்னர் இது தொடர்பாக ஆட்சியர் கிராம மக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும், எக்காரணம் கொண்டும் தாமதம் செய்யாமல் மருத்துவத்துறை இணை இயக்குநர் ராமையா தலைமையில் மருத்துவக்குழு அமைத்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், நிவாரண உதவியும் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தை அடுத்து கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...