/

மதுரை பொது மருத்துவமனை சுகாதாரப் பணிகளில் சிறைக் கைதிகள்

மதுரையில் சிறைக் கைதிகள் 15 பேர், மதுரை அரசு பொது மருத்துவமனையில் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:55 pm

ஜெயப்பாண்டி

மதுரையில் சிறைக் கைதிகள் 15 பேர், மதுரை அரசு பொது மருத்துவமனையில் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனர்.

மதுரை மருத்துவமனையில் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் அதிகம் பேர் சிகிச்சை பெற்று வருவதால், அந்த அளவுக்குத் தக்க சுகாதாரப் பணிகளில் ஈடுபட பணியாளர்கள் எண்ணிக்கை கூடுதலாகத் தேவை என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், பல்வேறு அமைப்பினர் இந்த சுகாதாரப் பணிகளில் ஈடுபட வேண்டுமென வேண்டுகோள்களும் விடுக்கப்பட்டன.

இதனிடையே இன்று காலை மதுரை சிறைக் கைதிகள் 15 பேர், பலத்த பாதுகாப்புடன் மதுரை அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்து வரப் பட்டனர். அவர்கள் அங்கே குழந்தை நல வார்டு உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.