திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

அதிமுக எம்.எல்.ஏ. வீடு தாக்கப்பட்ட வழக்கு:வீரபாண்டி ஆறுமுகத்தின் மகள் நீதிமன்றத்தில் சரண்

உள்ளாட்சித் தேர்தலின்போது அதிமுக எம்.எல்.ஏ. வீடு தாக்கப்பட்ட வழக்கில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகள் மகேஸ்வரி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், சேலம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனர்

Updated On :21 நவம்பர் 2013, 3:56 pm

உள்ளாட்சித் தேர்தலின்போது அதிமுக எம்.எல்.ஏ. வீடு தாக்கப்பட்ட வழக்கில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகள் மகேஸ்வரி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், சேலம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனர்.

 கடந்த 2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் வீரபாண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.கே.செல்வத்தின் வீடு கற்கள் வீசி தாக்கப்பட்டது. இது குறித்து விசாரித்த கொண்டலாம்பட்டி போலீஸார், மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகள் மகேஸ்வரி, தம்பி மகன் உமா சங்கர், இவரது மனைவி இந்திராணி, பாரப்பட்டி குமார், சோலைகுமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

 இந்த வழக்கில் சேலம் போலீஸார் கைது செய்யாமல் இருக்க அனைவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுள்ளனர். இந்த நிலையில் மகேஸ்வரி, உமாசங்கர், இந்திராணி, குமார் ஆகியோர் சேலம் 5-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

 குமார், உமாசங்கர் ஆகியோர் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் 3 வாரங்களுக்கு தினசரி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.