தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு வாரவிழா இன்று தொடக்கம்

விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு வாரவிழா (14-ம் தேதி) இன்று தொடங்கி, தொடர்ந்து 20-ம் தேதி வரையில் நடைபெற இருப்பதை முன்னிட்டு ஒவ்வொரு கூட்டுறவு வேளாண்மை வங்கி வளாகத்திலும்

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:45 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு வாரவிழா (14-ம் தேதி) இன்று தொடங்கி, தொடர்ந்து 20-ம் தேதி வரையில் நடைபெற இருப்பதை முன்னிட்டு ஒவ்வொரு கூட்டுறவு வேளாண்மை வங்கி வளாகத்திலும் மரக்கன்றுகள் மற்றும் பொதுமக்கள் பயன்படும் வகையில் மருத்துவமுகாமும் நடைபெற இருக்கிறது.

இது குறித்து மண்டல இணைப்பதிவாளர் ஜி.குருமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு வாரவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், இந்தாண்டும் 14-ம் தேதி  தொடங்கி, தொடர்ந்து 20-ம் தேதி வரையில் சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு 14-ம் தேதி மாவட்டம்  முழுவதும் கூட்டுறவு விவசாய வங்கிகளில் மரக்கன்றுகள் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதேபோல், 15-ம் தேதி பொதுமக்கள் அனைவரும் பயனடையும் வகையில்,   ராஜபாளையம், விருதுநகர், சிவகாசி நகர வங்கிகளின் சார்பில் அதன் வளாகத்தில் இலவச கண்சிகிச்சை முகாம் ரத்த பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது.  அதையடுத்து, விருதுநகர் மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில், இந்த வங்கியின் பணியாளர்கள் சார்பில் ரத்ததானம் முகாமும், 17-ம் தேதி தொப்பலாக்கரை, வத்திராயிருப்பு, முகவூர் ஆகிய உழவர் பணிக்கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு மண்பரிசோதனை முகாம் நடைபெற இருக்கிறது.

மேலும், 18-ம் தேதி சிவகாசி காமராஜர் சாலையில் சிவகாசி மாஸ்டர் பிரிண்டர்ஸ் அசோசியோசன் அரங்கத்தில் மாவட்ட அளவிலான கூட்டுறவு வாரவிழாவில் செய்தி மற்றும் சிறப்பு செயலாக்க துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்க இருக்கிறார். இந்த விழாவில் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். பின்னர் 19-ம் தேதி குறிப்பிட்ட கூட்டுறவு சங்க வளாகத்தில் 11 வட்டாரங்களில் உள்ள கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் சந்திப்பு இயக்கம் நடத்தப்பட இருக்கிறது.

பின்னர், 20-ம் தேதி மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் மாறிவரும் காலச்சூழலில் சமூக பொருளாதார எழுச்சிக்கு கூட்டுறவின் பங்கு என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது. அதனால், ஒவ்வொரு நாளும் நடைபெற இருக்கிற நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகியோர் பங்கேற்று பயனடைய வேண்டும் என மண்டல இணைப்பதிவாளர் மற்றும் கூட்டுறவு வார விழாவின் ஒருங்கிணைப்பாளரும்மான ஜி.குருமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.