விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் ராமராஜ் தலைமை வகித்தார். மாவட்ட மகளிரணிச் செயலாளர் காளீஸ்வரி மற்றும் மாணவரணி செயலாளர் ஜெகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், பரமக்குடி சம்பவம் குறித்த சம்பத் கமிஷன் அறிக்கை தலித் மக்களுக்கு எதிராக இருப்பதால் உடனே திரும்ப வேண்டும். மேலும், யாரையோ திருப்திப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட கமிஷன் போல் இருக்கிறது. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவில் இருந்து யாரும் பங்கேற்க கூடாது மற்றும் ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து இக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.