வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

விருதுநகரில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற ஆதிதமிழர் பேரவையினர் 26 பேர் கைது

இலங்கையில் நடைபெற இருக்கிற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி ஆதிதமிழர் பேரவையினர் ரயில் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக வந்த தகவலை

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:40 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் ரயில் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட முயன்ற ஆதிதமிழர் பேரவையினர் 2 பெண்கள் உள்பட 26 பேரை வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

இலங்கையில் நடைபெற இருக்கிற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி ஆதிதமிழர் பேரவையினர் ரயில் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக வந்த தகவலை அடுத்து போலீஸார் குவிக்கப்பட்டனர். அதையடுத்து, ஆதிதமிழர் பேரவையின் மாவட்ட தலைவர் சுந்தரராஜன் தலைமையில் 26 பேர் ரயில் நோக்கி வந்தவர்களை நுழைவு வாயிலேயே தடுத்து நிறுத்தி விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். இதில், மறியல் செய்ய முயன்ற 2 பெண்கள் உள்பட 26 பேரை கைது செய்து தனியார் அரங்கத்தில் அடைத்து வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.