வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

வேன் தலைகுப்புற கவிழ்ந்து 27 மாணவிகள் உள்பட 30 பேர் காயம்

விருதுநகர் அருகே சீனியாபுரத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் பொம்முசாமி(17). இவர் விருதுநகரில் தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார்.  சந்திரிகிரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த குருசாமி

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:39 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பள்ளிக்கூட வேன் தலைகுப்புற கவிழந்து விபத்துக்குள்ளானதில் 23 மாணவிகள் உள்பட 30 பேர் வரையில் காயம் அடைந்தனர்.

விருதுநகர் அருகே சீனியாபுரத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் பொம்முசாமி(17). இவர் விருதுநகரில் தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார்.  சந்திரிகிரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த குருசாமி என்பவரின் மகன் கருப்பசாமி(31). இவர் பள்ளிகளுக்கு வேனில் மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் பணியினை மேற்கொண்டு வருகிறார். இ்வரது வாகனத்தில் சுற்றியுள்ள கிராமங்களான சீனியாபுரம், எல்கைபட்டி, சந்திரகிரிபுரம், கருப்பம்பட்டி, சுந்தரலிங்காபுரம் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை வழக்கம் போல் ஏறி பயணம் செய்தனர்.

இந்நிலையில் விருதுநகர்-அழகாபுரி சாலையில் தனியார் பொறியியல் கல்லூரி அருகே சென்று கொண்டிருக்கும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன்  திடீரென தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பயணம் செய்த மாணவ, மாணவிகள் 30 பேர் காயம் அடைந்தனர். உடனே சம்பவம் குறித்த அறி்ந்த ஆமத்தூர் போலீஸார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சீனியாபுரத்தைச் சேர்ந்த பொம்முசாமி ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வாகன ஓட்டுநர் கருப்பசாமி மீது வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.