பிளஸ்2 மாணவர் கொலை வழக்கில் 2 இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை
விருதுநகரில் பிளஸ்2 மாணவரை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்கள் இரண்டு பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.


விருதுநகரில் பிளஸ்2 மாணவரை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்கள் இரண்டு பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
விருதுநகர் இந்திராநகரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகன் ரமேஷ்(17). இப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அப்போது பிளஸ்2 படித்து வந்தார். திருமங்கலம் அருகே ஆலங்குளத்தைச் சேர்ந்த பிச்சை முத்து என்பவரின் மகன் ராஜா(31). இவருடன் மேலும் 8 பேர் பொங்கல் திருவிழாவிற்காக இந்திரா நகர் உறவினர் வீட்டுக்கு வந்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த 9.4.2012 அன்றைய நாள் திருவிழா பொருள்காட்சி பார்ப்பதற்கு ரமேஷ் தம்பியான சதீஸ் சென்றாராம். அதேபோல், ராஜாவும் கோஷ்டியுடன் வந்தார்களாம். அப்போது, இவர்களுக்குள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தாக்க வந்ததை அடுத்து அவர்களிடம் தப்பி இந்திரா நகருக்கு வந்து தன்னோடு பிரச்னை செய்வதாக சகோதரர் ரமேஷிடம் தெரிவித்துள்ளார். அப்போது, அவர்களும் வர தகராறு முற்றுகிறது. இதையடுத்து ராஜா பிடித்துக் கொள்ள, அவரது நண்பர் பாலகிருஷ்ணன்(23) தான் இடுப்பு பகுதியில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரமேஷை குத்தினார். இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக சதீஷ் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதை அடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்த வழக்கு விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்துக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ராஜாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.7200 அபராதமும், பாலகிருஷ்ணனுக்கு ஆயுள்தண்டையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஸ்டாலின் செல்வராஜ் தீர்ப்பு வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...