மதுரையில் போலியாக நெல்லை முகவரி கொடுத்து தம்பதி விடுதியில் தற்கொலை
மதுரையில் விடுதி ஒன்றில் இன்று காலை கணவன்- மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்கள் போலியாக நெல்லை முகவரி கொடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.


மதுரையில் விடுதி ஒன்றில் இன்று காலை கணவன்- மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்கள் போலியாக நெல்லை முகவரி கொடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மதுரை திருப்பாலையைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (56). அவரது மனைவி மகேஸ்வரி (50) இவர்களுக்கு இரண்டு மகன்கள். இந்த நிலையில் திடீரென்று மேலப் பெருமாள் மேஸ்த்ரி வீதியில் போலியாக நெல்லை முகவரி கொடுத்து கோமதி, கிருஷ்ணன் என்ற பெயர்களில் இருவரும் தங்கியுள்ளனர்.
இன்று காலை வெகு நேரம் விடுதியில் கதவைத் திறக்காததால், சந்தேகம் கொண்ட ஊழியர்கள் கதவை உடைத்துத் திறந்து பார்த்தனர். அப்போது இருவரும் விஷம் அருந்திய நிலையில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர்களின் செல்போனில் தொடர்பு கொண்ட போது, உண்மையான முகவரி தெரிந்துள்ளது. மேலும், அவர்கள் தங்கள் இரு மகன்களுக்கும் போனில் பேசியிருக்கிறார்கள் என்பதால், போலீஸார் விசாரணையைத் துவக்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...