வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

"வெற்றியைப் பார்க்க என் அம்மா இல்லையே!” மூன்றாமிடம் பெற்ற மாணவி சோகம்!

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. இதில், மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்று  சாதனை படைத்துள்ளார் என்.ஜி.ராஜேஸ்வரி.

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:40 am

ஜெயப்பாண்டி

Story image

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. இதில், மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்று  சாதனை படைத்துள்ளார் என்.ஜி.ராஜேஸ்வரி.

மதுரை மாவட்டம் மேலூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த  கொசகுளம் சி.ஈ.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர் இவர். 1187 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்த ராஜேஸ்வரியின் கடின உழைப்புக்குப் பின்னார் அவர் தாயார் லலிதா இருந்துள்ளார். தாயார் ஆசிரியை. தந்தை கணேசமூர்த்தி பிஎஸ் என் எல் ஊழியராம். இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் இவரது தாயார் காலமானதால், அதற்காக சென்னைக்கு வந்துள்ளார் ராஜேஸ்வரி.

தன்னை ஆடிட்டர் ஆக்கிப் பார்க்கும் ஆசையில் தன் தாய் இருந்தார் என்று வருத்தத்துடன்  தனது ஆசையைப் பகிர்ந்து கொண்ட ராஜேஸ்வரி, தனது வெற்றிச் செய்தியைக் கேட்க தன் தாயார் உயிருடன் இல்லையே என்று மிகவும் வருத்தத்துடன் கூறினார் ராஜேஸ்வரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.