சம்பவம் கடையைக் காலி செய்வது தொடர்பாக நடந்தது என்றும், அரசியல் பிரமுகர்கள் தலையிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும், இதுதொடர்பாக திடீர்நகர் குற்றபிரிவு போலீஸார் விசாரணை நடத்திவருவதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது புகார் தொடர்பாக லகாராம், முகமதுஹவுஸ், முருகன் (இவர் மதுரை மேயரின் கார் ஓட்டுநர் எனக்கூறப்படுகிறது), மணிமாறன், சுபாஷ், மகேந்திரன் மற்றும் சிலர் என குறிப்பிட்டு 3 பிரிவுகளில் வழக்குப்பதிந்துள்ளனர். மேலும், தலராம்சௌத்திரியின் கடையை வாங்க லகாராம், முகமதுஹவுஸ் ஆகியோர் முயற்சித்த நிலையில், மேயரின் கார் ஓட்டுநர் ஆள்கள் எனக்கூறிக்கொண்டு வந்த முருகன் உள்ளிட்ட 3 பேர் தலராம்சௌத்திரியை கத்திமுனையில் ஆட்டோவில் கடத்தியுள்ளனர். கோச்சடை அருகே சார்பதிவாளர் அலுவலகம் பின்புறம் 6 ஆட்டோக்கள், 5 இருசக்கர வாகனங்களில் வந்த 30 ரௌடிகள் தலராம்சௌத்திரியை மிரட்டி தாள்களில் கையெழுத்துப் பெற்றதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.