மாநகராட்சி முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த சிறப்புக் குழு: மார்க்சிஸ்ட் கோரிக்கை
மதுரை மாநகராட்சி முறைகேடுகள் குறித்து சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் வேண்டுகோள் விடுத்தது.


மதுரை மாநகராட்சி முறைகேடுகள் குறித்து சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் வேண்டுகோள் விடுத்தது.
மதுரையில் உதவிப் பொறியாளர்கள் நியமனம், சுற்றுலாத்துறை நிதியில் இருந்து சாலை மேம்பாட்டுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் விடுவித்தது, தனியார் அமைப்பான எட்வர்ட் மன்ற கட்டடப் பணியை மாநகராட்சி தடுத்து நிறுத்தியது ஆகிய பிரச்னைகள் தொடர்பாக மாநகராட்சி நடந்து கொண்ட விதம் குறித்து முதல்வர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்த மூன்று பிரச்னைகளிலும் உள்நோக்கத்துடன் மாநகராட்சி உயர்மட்ட அதிகாரிகளும் பொறுப்பில் இருப்பவர்களும் நடந்துகொண்டது தெரியவந்தது, இதற்கான ஆதாரங்களும் வெளியிடப்பட்டது. ஆகவே மதுரை மாநகராட்சி முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
திமுக பொறுப்பில் இருந்த போது நடந்த முறைகேடுகள் இப்போதும் தொடராமல் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும், மாநகராட்சியில் வெளிப்படையான நேர்மையான நிர்வாகம் தேவை, நேர்மையான அதிகாரிகளை நியமித்து சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யவேண்டும். தற்போது நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தில் இது வலியுறுத்தப்படும் என்றனர் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலர் ப.விக்கிரமனும், எம்.எல்.ஏ., அண்ணாதுரையும். இன்று செய்தியாளரிடம் பேசியபோது இதனை வலியுறுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...