/

மதுரையில் கல்லூரி பேருந்து மோதி பள்ளி மாணவர் பலி

மதுரையில் இன்று காலை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மாணவர் மீது கல்லூரிப் பேருந்து மோதியதில், மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:47 am

ஜெயப்பாண்டி

மதுரையில் இன்று காலை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மாணவர் மீது கல்லூரிப் பேருந்து மோதியதில், மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மதுரையில் ராஜாஜி சாலை, இ.பி. காலனியைச் சேர்ந்தவர் விவேகானந்தன்.  இவரது மகன் கரண் விக்னேஷ் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தார்.

இன்று காலை கரண் விக்னேஷ், பள்ளிக்குச் செல்லும் போது அதே பகுதியைச் சேர்ந்த மகளிர் கல்லூரி பேருந்து ஒன்று அதிவேகமாக வந்து மாணவர் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மாணவர் உயிரிழந்தார். இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள மக்கள் திரண்டு வந்து மறியல் செய்தனர்.  மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக, மதுரையில் உள்ள கல்லூரிகளுக்கு இயக்கப்படும் பேருந்து ஓட்டுநர்களின் கவனக்குறைவால் ஏராளமான விபத்துக்கள் ஏற்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், பல கல்லூரி பேருந்துகளில் ஓட்டுநர்கள், அதற்கான உரிமம் பெறாமல் இருப்பதாகவும் புகார்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.