ஏற்கனவே திருமணமான நாளில் இருந்தே கணவரும், மாமியார் பொன்னுத்தாயும் உள்ளிட்டோரும் சீர்வரிசை சரியாக செய்யவில்லை எனக் கூறியும், நகையும் அதிகமாக போடவில்லையெனக் கூறி சித்ரவதை செய்து வந்தார்களாம். இதனால், மனம் வெறுத்த கண்மணி கடந்த செவ்வாய்கிழமை காலையில் வீட்டில் அனைவரும் வெளியே சென்றிருக்கும் நேரத்தில் உத்திரத்தில் தூக்கி்ட்டு உயிரிழந்தாராம்.இது குறித்து மணப்பெண்ணின் தந்தை செல்வம் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். எனவே இது தொடர்பாக கணவர் கோபிநாத், மாமியார் பொன்னுத்தாய் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.