திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது ஓ.கோவில்பட்டி கிராம மேட்டுப்பகுதி, எம்.ஜி.ஆர் நகர் பகுதி மக்கள் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வலியுறுத்தி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்தக்

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:32 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே உள்ள ஓ.கோவில்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது ஓ.கோவில்பட்டி கிராம மேட்டுப்பகுதி, எம்.ஜி.ஆர் நகர் பகுதி மக்கள் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வலியுறுத்தி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்தக் கிராமத்தில் மேட்டுப் பகுதியில் தெருவிளக்கு வசதிகள் இல்லை. இதனால், இரவு நேரங்களில் விஷப்பூச்சிகள் தாக்குதலுக்கு உள்ளாக வேண்டியுள்ளது. அதேபோல், அர்.சி.தெரு மற்றும் எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மேடான பகுதியாக இருப்பதால் குடிநீர் விநியோகம் சமமாக வழங்கப்படுவதில்லை.

இதுபோன்ற காரணங்களால் அருகில் பம்ப்செட் கிணறுகளில் எடுத்து வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால், ஒவ்வொரு நாளும் வேலைக்குச் செல்வது பாதிக்கப்படுவதாக கூறி அக்கிராமத்தின் பட்டாசு தொழிலாளர் சங்கத்தில் வட்டார தலைவர் ஆரோக்கியராஜ் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் உங்கள் குறைகள் குறித்து ஒன்றிய அதிகாரிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வார்கள். அதையடுத்து அங்குள்ள குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும். தற்போது, குடிநீர் வசதிக்காக அடிபம்பு அமைப்பதற்கு உடனே நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், தெருவிளக்குகள் அமைப்பதற்கு ஊராட்சி தலைவரிடம் எடுத்துக் கூறுகிறேன். அதேபோல், கழிவு நீர் வாறுகால் அமைப்பதற்கு அலுவலர்கள் ஆய்வுக்கு பின் தாய் திட்டத்தில் செயல்படுத்தி தருவதாக உறுதியளித்த பின் கிராம மக்கள் கலைந்து சென்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.