திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஆடு, கறவை மாடுகள் பெறுவதற்கு பயனாளிகளை தேர்வு செய்ய ஜூலை-1ல் கிராம சபை கூட்டம்

இந்த  ஆண்டில் விலையில்லா ஆடு, கறவை மாடுகள் வருகிற ஆகஸ்டு மாதம் வழங்கப்பட இருக்கிறது. இதில் விலையில்லா ஆடுகள் வழங்குவதற்கு  ஊராட்சி ஒன்றியங்களில் குறிப்பிட்ட கிராமங்களில் உள்ள

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:29 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தி்ல விலையில்லா ஆடு மற்றும் கறவை மாடுகள் பெறுவதற்கு ஜூலை 1-ம் தேதி கிராம சபைக் கூட்டத்தை நடத்தி  பயனாளிகளிடம் விண்ணப்பங்கள் பெற்று தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:

இந்த  ஆண்டில் விலையில்லா ஆடு, கறவை மாடுகள் வருகிற ஆகஸ்டு மாதம் வழங்கப்பட இருக்கிறது. இதில் விலையில்லா ஆடுகள் வழங்குவதற்கு  ஊராட்சி ஒன்றியங்களில் குறிப்பிட்ட கிராமங்களில் உள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அதன் அடிப்படையில் காரியப்பட்டி ஒன்றியத்தில் மாந்தோப்பு-31, மேலக்கன்னாங்குளம்-37, நரிக்குடி ஒன்றியத்தில் நல்லுக்குறிச்சி-30, நாலூர்-28, ராஜபாளையம் ஒன்றியத்தில் வடக்கு தேவதானம்-52, சாத்தூர் ஒன்றியத்தில் என்.மேட்டுப்பட்டி-39, சிவகாசி ஒன்றியத்தில் நெடுங்குளம்-22, ஊராம்பட்டி-36, ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் கொத்தங்குளம்-80, முள்ளிக்குளம்-31, திருச்சுழி ஒன்றியத்தில் மிதிலைக்குளம்-62, வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் கனஞ்சான்பட்டி-19, விருதுநகர் ஒன்றியத்தில் கோட்டநத்தம்-20, குந்தலப்பட்டி-17 வத்திராயிருப்பு ஒன்றியத்தில் மகராஜபுரம்-92 என மொத்தம் 596 பயனாளிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது.

அதேபோல், கறவை மாடுகள் வழங்க குறிப்பிட்ட ஊராட்சிகளில் பயணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், காரியாபட்டி ஒன்றியத்தி்ல பாப்பனம்-50, வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் சுப்பிரமணியபுரம் கிராமத்தில்-50 என மொத்தம் 100 பயனாளிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது.எனவே இது தொடர்பாக விலையில்லா ஆடு, கறவை மாடுகள் வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் ஜூலை-1ம் தேதி கிராம சபைக் கூட்டத்தை நடத்தி பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும். அதோடு, இத்திட்டம் குறித்து கிராம மக்களிடையே விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்த முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.