எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனித்திறன் பயிற்சி

விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் திட்டம் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற தனித்திறன் பயிற்சி அளிப்பதற்கு இளைஞர்களுக்கான நேர்முகத் தேர்வு வருகிற 28,29 ஆகிய நாள்களில் குறிப்பிட்ட

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:28 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் திட்டம் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற தனித்திறன் பயிற்சி அளிப்பதற்கு இளைஞர்களுக்கான நேர்முகத் தேர்வு வருகிற 28,29 ஆகிய நாள்களில் குறிப்பிட்ட இடங்களில் நடைபெற இருப்பதாக மகளிர் திட்ட அலுவலர் பிச்சை தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் மகளிர் திட்டம் சார்பில் கிராமங்களில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனித்திறன் பயிற்சி அளிக்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. அதேபோல், இப்பயிற்சியானது அவரவர் விரும்பும் பரிவுகளில் தனித்திறன் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், நிகழாண்டிலும் இப்பயிற்சிகளை அளிப்பதற்கு பயிற்சி நிலையங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே இங்கு பயிற்சிக்கு பின் வேலைவாய்ப்பு பெற்றுத் தரவும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

எனவே அதன் அடிப்படையில் உதவி சமையலர், சில்லறை வணிக விற்பனையாளர், அலுவலக வரவேற்பாளர், முதியோர்களை பராமரிப்பதற்கான பயிற்சி, உணவு தயாரித்தல் பயிற்சி, தையல் பயிற்சி, இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி, லேப் உதவியாளர் பயிற்சி, நர்சிங் உதவியாளர் பயிற்சி, எலக்ரீசியன் ஆட்டோ மொபைல், பிட்டர் எலெக்ரீசியன் பயிற்சி, கிரேன் மற்றும் ஜே.சி.பி  ஆபரேட்டர் பயிற்சி, அழகு மற்றும் மருத்துவக் கலைபயிற்சி, தையல் மற்றும் எம்பராய்ரிங் பயிற்சி உள்ளிட்டவைகள் இந்த மாவட்டத்தில் பல்வேறு பயிற்சி நிலையங்கள் அளிக்கப்பட இருக்கிறது. மேலும், இப்பயிற்சியானது அதன் தன்மைக்கேற்ப குறைந்தது 2 மாதங்கள் முதல் கூடுதலாக 6 மாதங்கள் வரையில் அளிக்கப்பட இருக்கிறது. அதோடு, பயிற்சி நிறைவில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்படவும் இருக்கிறது. அதேபோல், மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு பிரிவிலும் 50 பேர் வரையில் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட இருக்கிறார்கள்.

இப்பயிற்சி பெறுகிறவர்களுக்கான நேர்முகத் தேர்வு வருகிற 28-ம் தேதி அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 29-ம் தேதி சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் வைத்து மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் நேர்முகத் தேர்வு நடைபெற இருக்கிறது. எனவே பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ள 18 வயது முதல் 35 வயது வரையிலானவர்கள் தங்களின் படித்த அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் ஆகியவைகளுடன் குறிப்பிட்ட நேரத்திற்கு முன் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பயனடைய வேண்டும் என என மகளிர் தி்ட்ட அலுவலர் பிச்சை தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.