தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மதுரையில் செயின் பறித்த திருடனை மடக்கிப் பிடித்த வீரப்பெண்

மதுரையில், செயினைப் பறித்துக் கொண்டு ஓட முயன்ற திருடனை மடக்கிப் பிடித்துள்ளார் வீரப்பெண் ஒருவர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:27 pm

ஜெயப்பாண்டி

மதுரையில், செயினைப் பறித்துக் கொண்டு ஓட முயன்ற திருடனை மடக்கிப் பிடித்துள்ளார் வீரப்பெண் ஒருவர்.

மதுரை லெட்சுமிபுரம் ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி பிரபாவதி (36). இன்று காலை வீட்டு முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்த போது 20 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், பிரபாவதியிடம், விலாசம் கேட்பது போல வந்து பேசினார். அப்போது, பிரபாவதியின் கழுத்தில் இருந்த 11 பவுன் தங்க நகைகளை பறித்துள்ளார்.

அப்போது, அந்த வாலிபரை பிடித்துக் கொண்டு பிரபாவதி போராடியுள்ளார். பிரபாவதியிடம் இருந்து தப்பிப்பதற்காக அவன் தாக்கியுள்ளான். எனினும், பிரபாவதியின் பிடி தளரவில்லை. பிரபாவதியின் கூக்குரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, திருடனைப் பிடித்தனர்.

இதையடுத்து, திருடன் தாக்கியதால் காயமடைந்த பிரபாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.