எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கூட்டுறவு அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பொறுப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாக குழு இயக்குநர்கள் ஆகியோர் தங்கள் பொறுப்புக்களை உணர்ந்து பொதுமக்களுக்காக பணியாற்ற வேண்டும் என

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:27 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாக குழு இயக்குநர்கள் ஆகியோர் தங்கள் பொறுப்புக்களை உணர்ந்து பொதுமக்களுக்காக பணியாற்ற வேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வேண்டுகோள் விடுத்தார்.

விருதுநகர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி வளாக அரங்கத்தில் கூட்டுறவு அமைப்புகளுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கான நிர்வாக பயிற்சி முகாமின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இப்பயிற்சி முகாமை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்து தொடங்கி வைத்து பேசுகையில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள், இயக்குநர்கள் ஆகியோர் கூட்டுறவு பற்றிய விதிமுறைகள் மற்றும் நிர்வாகம் குறித்து அறி்ந்து கொள்ள வேண்டும். இதற்காகவே இப்பயிற்சி முகாம் இன்று தொடங்கி, தொடர்ந்து 26 ம் தேதி வரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதில், கூட்டுறவு துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், கூட்டுறவு நியாய விலைக்கடைகளின் வியாபார நடைமுறைகள், கூட்டுறவு சங்கங்களின் சட்ட விதிமுறைகள் ஆகியவைகள் பற்றி அனைவருக்கும் விரிவாக எடுத்துரைக்கப்படும்.

அதேபோல், கூட்டுறவு சங்கத்தில் தலைவர் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது என்பது குறித்தும் அறிவுறுத்தப்படும். இதில், சங்கத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட செயல்களை மட்டுமே செயல்படுத்த வேண்டும் எனவும், செய்யக் கூடாதவைகளுக்கு எதிராக செயல்படக் கூடாது. ஒரு கூட்டுறவு சங்கத்தின் நடவடிக்கைக்கு தலைவர்களே பொறுப்பு ஆவார்கள். அதனால், உண்மையுடனும், நேர்மையுடனும் பொதுமக்களுக்கு பணியாற்றுவதற்கு முன்வர வேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டார்.

அதையடுத்து, இப்பயிற்சி முகாமில் மண்டல இணைப்பதிவாளர் ஜி.குருமூர்த்தி சங்கத்தின் நடைமுறை குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.மேலும், இந்த முகாமில் மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப்பதிவாளர் ராஜன், ஸ்ரீவில்லிபுத்தூர் துணைப்பதிவாளர் ஜானகிராமன் பொதுவிநியோகத்திட்ட துணைப்பதிவாளர் சீனு உள்ளிட்டோர் உரிமை, பொறுப்பு மற்றும் கடமைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர். இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட அனைத்து வகை கூட்டுறவு அமைப்புகளுக்கான தலைவர்கள் மற்றும் நி்ர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.