எனவே இதுபோன்று விளைநிலங்களை சேதப்படுத்தும் விலங்குகளை கட்டுப்படுத்தும் வகையில் மலைப்பகுதியில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் மற்றும் நீர் வளர்த்தை உண்டாக்கவும் வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நிகழாண்டில் மேற்கு தொடர்ச்சி மலையில் நீர் ஆதாரப் பகுதிகளில் 1000 ஹெக்டேரில், தலா 250 ஹெக்டேர் பரப்பில் 4 மழை நீர் சேகரிப்பு குட்டைகள் உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.அதோடு, இக்குட்டைகள் அமைய இருக்கிற பகுதியில் பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கும் வகையில் சுற்றிலும், ஒவ்வொரு 250 ஹெக்டேரிலும், தேக்கு, வேம்பு, மூங்கில், நாவல் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளும் நடப்பட இருக்கிறது. இப்பணிகளை மேற்கொள்வதற்காக அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன் அடிப்படையில் சாப்டூர், தாணிப்பாறை, பிளவக்கல் அணை மற்றும் சேத்தூர் மலைப்பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் சமதள பரப்புகளை கண்டறிந்து, மழை நீர் சேகரிப்பு குட்டைகள் அமைக்கும் பணி தொடங்க இருப்பதாக மண்டல வனப்பாதுகாவலர் அஜிஸ்குமார் வத்ஸவா தெரிவித்தார்.