தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை கடத்தல்

மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்டது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:12 pm

ஜெயப்பாண்டி

மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே தொம்மப்பட்டியைச் சேர்ந்தவர் தினகரன். இவருடைய மனைவி மீனாட்சி பிரசவத்துக்காக வெள்ளிக்கிழமை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் வெள்ளிக்கிழமை காலையில் ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை குழந்தையை மீனாட்சியிடம் இருந்து பாட்டி கேட்டதாகக் கூறி சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

பிறகுதான் பாட்டியிடம் குழந்தை சேரவில்லை என்று தெரிந்தது. இதையடுத்து, வெகு நேரம் ஆகியும் குழந்தையைக் காணாததால், போலீசில் புகார்  அளிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. அப்போதுதான், குழந்தை கடத்தப்பட்டது தெரிய வந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்து வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில், தற்போது மேலும் குழந்தைக கடத்தப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.