மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை: சிறுவன் சாவு

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் குமரவேல் (11). அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். குமரவேல் கடந்த ஒரு

Updated On :8 ஜூன் 2013, 12:47 pm

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவரின் தவறான அறுவை சிகிச்சையால் பள்ளிச் சிறுவன் இறந்ததாக பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் குமரவேல் (11). அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். குமரவேல் கடந்த ஒரு மாதமாக தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இது தொடர்பாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அச்சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அச்சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர்.

இதைத் தொடர்ந்து சிறுவனை ஜூன் 6-ம் தேதி அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். வெள்ளிக்கிழமை (ஜூன் 7) காலை 8.30 மணிக்கு சிறுவனை அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் செங்குட்டுவன், கார்த்தி ஆகியோர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.  அறுவை சிகிச்சை மதியம் 12.30 மணிக்கு முடிந்தது. மாலை 4.30 மணிக்கு சிறுவனுக்கு ஜூஸ் வழங்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளர். அதே போல் சிறுவனுக்கு மாலை 4.30 மணிக்கு ஜூஸ் வழங்கியுள்ளனர். இதற்கிடையில் மாலை 6 மணிக்கு மேல் சிறுவனின் உடல்நிலை மோசமானது. இரவு 9 மணிக்கு மேல் சிறுவன் இறந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோம் மற்றும் குடும்பத்தினர் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து சிறுவனின் உடல் இன்று காலை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு மருத்துவ அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து செங்கல்பட்டில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.