எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

எய்ட்ஸ் பாதித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

கடலூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு இணைந்து வழங்கும்

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:05 pm

VASUDEVAN.K

கடலூர் மாவட்டத்தில் எய்ட்ஸ் பாதித்த 38 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு இணைந்து வழங்கும் தமிழ்நாடு எச்ஐவி,  எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான தமிழ்நாடு அறக்கட்டளை மூலம் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட 38 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைக்கான காசோலை ரூ.1,20,000 வழங்கினார். இதில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள 12 குழந்தைகளுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.24 ஆயிரமும், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் 17 பேருக்கு ரூ.51 ஆயிரமும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 9 பேருக்கு ரூ.5,000 வீதம் ரூ.45 ஆயிரமும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.