எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

முதியோர் உதவித்தொகை பணம் கேட்கும் அஞ்சல் ஊழியர் மீது புகார் தெரிவிக்கலாம்

முதியோர் உதவித் தொகையை வழங்க பணம் கேட்கும் அஞ்சல் துறை ஊழியர் மீது புகார் தெரிவிக்கலாம் என

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:04 pm

VASUDEVAN.K

முதியோர் உதவித் தொகையை வழங்க பணம் கேட்கும் அஞ்சல் துறை ஊழியர் மீது புகார் தெரிவிக்கலாம் என அஞ்சல்துறை அறிவி்த்துள்ளது.

 இதுகுறித்து புதுச்சேரி கோட்ட அஞ்சலக முதன்மை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை நகர மண்டல அஞ்சல் வட்டத்தில் 20 தலைமை அஞ்சலகங்கள், 551 துணை அஞ்சலகங்கள், 1,646 கிளை அஞ்சலகங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது. இந்த சேவையிலோ அல்லது முதியோர் உதவித் தொகை வழங்கும் அஞ்சல் துறை ஊழியர்களுக்கோ பணம் எதுவும் வழங்க வேண்டாம்.

 இதனையும் மீறி தபால் துறை ஊழியர் பணம் கேட்டால், இதுகுறித்து அஞ்சல்துறைத் தலைவர், சென்னை நகர மண்டலம், சென்னை-600 002 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது 044-28592877 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிவித்தால், சம்மந்தப்பட்ட ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை நகர மண்டலத்தின் அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார். எனவே, வாடிக்கையாளர்கள் அஞ்சல் துறையில் வேண்டுகோளை ஏற்று அஞ்சலக சேவைகள் மேம்பட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.