எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிறப்பு எஸ்ஐகளுக்கு அதிகாரம் இல்லை: டிஐஜி முருகன்

சிறப்பு எஸ்ஐகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது என விழுப்புரம் சரக டிஐஜி முருகன் கூறினார்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:04 pm

VASUDEVAN.K

சிறப்பு எஸ்ஐகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது என விழுப்புரம் சரக டிஐஜி முருகன் கூறினார்.

 கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பணிபுரிந்து வரும் சிறப்பு எஸ்ஐகளுக்கான ஆலோசனை கூட்டம் கடலூர் போலீஸ் ஜாங்கீட் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

 இதில் விழுப்புரம் சரக டிஐஜி முருகன் பேசியது, சிறப்பு எஸ்ஐகள் என்றாலும் சீனியர் ஏட்டுகள்தான். அனைத்து பணிகளையும் செய்ய தயாராக இருக்க வேண்டும். போலீஸ் நிலையத்தில் ஏட்டுகள் செய்கின்ற வேலைகளை நீங்களும் செய்ய வேண்டும். தவிர்க்க முடியாத பட்சத்தில் பாரா வேலையையும் பார்ப்பதற்கு தயக்கம்காட்ட கூடாது.

 அதே போல சிறப்பு எஸ்ஐகள் முதல் தகவல் அறிக்கையை மட்டும் தயார் செய்யலாம். ஆனால் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய கூடாது. குற்றப்பத்திரிக்கையை எஸ்ஐகள் தான் தாக்கல் செய்ய வேண்டும். எந்தவித சிறு பிரச்னைக்கும் இடம் கொடுக்காமல் சிறப்பான முறையில் பணிபுரிய வேண்டும் என்றார்.

 இதன் பின்னர் மாலையில் ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி காவலர்களின் அணிவகுப்பை பார்வையிட்டார்.  பிறகு நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட எஸ்பி ஆ.ராதிகா, கூடுதல் எஸ்பி  ராஜன் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.