எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க கோரிக்கை

வேலைவாய்ப்பு, மறுவாழ்வு தொகையினை முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் எனஎன்எல்சி நிறுவனத்திற்கு

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:04 pm

VASUDEVAN.K

வேலைவாய்ப்பு, மறுவாழ்வு தொகையினை முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் எனஎன்எல்சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமாரிடம் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:கடந்த 1990-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு முடிய என்எல்சிக்கு நிலம், வீடு, கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு என்எல்சி நிறுவனத்தில் நிரந்தர வேலைவாய்ப்பினைப் பெற்றுத் தருவதற்கு தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர்(தனி பொறுப்பு) மற்றும் தனித் துணை ஆட்சியர் (நில எடுப்பு அலுவலகம்) கடந்த 23 ஆண்டுகளாக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 என்எல்சி நிறுவனத்திற்கு நிலம், வீடு கொடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்படுத்த கூடிய நிலம், வீடு கொடுத்து பாதிக்கப்பட்ட சங்கங்களுக்கு, என்எல்சி நிறுவனம் முன்னுரிமை அளிக்காமல், அனைத்து ஒப்பந்தங்களுக்கும் படிவம் வழங்க மறுத்து வருகிறது. எனவே மாவட்ட வருவாய் அலுவலர் (தனி பொறுப்பு) நில எடுப்பு அலுவலகத்தில் நிலம், குடியிருப்பு வீடு கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கான வேலைவாய்ப்பு பட்டியலில் உள்ளபடி முன்னுரிமை உள்ளவர்களுக்கு 45 லட்சம் ரூபாய்,  2ம் முன்னுரிமை உள்ளவர்களுக்கு 30 லட்சம் ரூபாய், 3ம் முன்னுரிமை உள்ளவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.