காவலரின் மனைவி தீக்குளித்து தற்கொலை : குழந்தை பலி, ஏட்டு கவலைக்கிடம்
மதுரையில், சட்டம் ஒழுங்கு காவலராக பணியாற்றி வரும் ஏட்டுவின் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் தீயில் கருகி குழந்தை பலியானது, ஏட்டு கவலைக்கிடமாக உள்ளார்.\


மதுரையில், சட்டம் ஒழுங்கு காவலராக பணியாற்றி வரும் ஏட்டுவின் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் தீயில் கருகி குழந்தை பலியானது, ஏட்டு கவலைக்கிடமாக உள்ளார்.
மதுரையைச் சேர்ந்தவர் சுபாஷ் காந்தி (41). இவர் விளக்குத்தூண் காவல்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக பணியாற்றி வருகிறார். குற்றப் பிரிவு குடியிருப்பு பகுதியில், தனது மனைவி ராஜேஸ்வரி (32) மற்றும், இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
திங்கட்கிழமை காலை தனது மூத்த பெண்ணை பள்ளியில் விட்டுவிட்டு வந்த சுபாஷ் காந்தி, காலையிலேயே குடிபோதையில் இருந்துள்ளார். இதனால், தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில், மனைவி ராஜேஸ்வரி தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அப்போது அங்கே இருந்த 2 வயது சிறுவன் சாய்சரண் மீதும், சுபாஷ் காந்தி மீதும் தீப்பற்றியது.
ஆபத்தான நிலையில் மூன்று பேரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், தாயும், குழந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சுபாஷ் காந்தி கவலைக்கிடமான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...