மதுரை : கழுத்தில் படுகாயத்துடன் ஆசிரியர் மர்மச்சாவு
மதுரையில், பள்ளிக்குச் சென்ற ஆசிரியை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


மதுரையில், பள்ளிக்குச் சென்ற ஆசிரியை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுரை அருகே விஷால் நகரைச் சேர்ந்த லூயிஸ். இவர் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரியாவார். இவருடையை மனைவி ஜெயராணி (52) தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இன்று காலை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்குச் சென்றார் ஜெயராணி. இந்த நிலையில், பனங்காடு என்னும் இடத்தில் ஜெயராணி கீழே விழுந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.
அங்கு சென்று பார்த்த போது, அவரது கழுத்தில் ஆழமான காயம் ஏற்பட்டிருந்தது. அவர் அணிந்திருந்த தாலிச்சங்கிலி சிதறிக் கிடந்தது.
அவரது உடலை கைப்பற்றிய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், ஆசிரியை திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...