தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

நகைக்காக நண்பனை கொலை செய்தவர் கைது

சோழவந்தான் அருகேயுள்ள கச்சிராயிருப்பு நிலையூர் கால்வாயில் கத்தி குத்து காயங்களுடன் அண்மையில் ஆண் சடலத்தை போலீஸார் கைப்பற்றினர். இறந்தநபர் மேலக்கால் கொடிமங்கலத்தைச் சேர்ந்த பெயிண்டர்

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:52 pm

ஜெயப்பாண்டி

நகைக்காக நண்ரை கொலை செய்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சோழவந்தான் அருகேயுள்ள கச்சிராயிருப்பு நிலையூர் கால்வாயில் கத்தி குத்து காயங்களுடன் அண்மையில் ஆண் சடலத்தை போலீஸார் கைப்பற்றினர். இறந்தநபர் மேலக்கால் கொடிமங்கலத்தைச் சேர்ந்த பெயிண்டர் ராஜா (28) என விசாரணையில் தெரியவந்தது. கொலையாளியை தனிப்படை போலீஸார் தேடிவந்தனர். இந்நிலையில் மண்ணாடி மங்கலத்தைச் சேர்ந்த முத்துக்காமாட்சி மகன் காமாட்சி என்ற புரோட்டோ பாரதி (27) கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தார். அவரை போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.

பாரதியும் பெயிண்டர் வேலை பார்தது வந்துள்ளார். அவருக்கு பணகஷ்டம் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் இருவரும் சென்று மது குடித்ததாகவும், பண ஆசையில், ராஜைவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அவர் அணிந்து இருந்த 15 கிராம் தங்கச்செயின் மற்றும் ரூ.200-ஐ எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றதாக பாரதி போலீசில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.