தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

வயதான தம்பதியை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை

மதுரையில், வயதான தம்பதியை கட்டிப்போட்டுவிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:46 pm

ஜெயப்பாண்டி

மதுரையில், வயதான தம்பதியை கட்டிப்போட்டுவிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மதுரை கொதிக்குளம் பகுதியில் வசிப்பர் நடராஜன் (68). இவர் ஓய்வு பெற்ற டிஎஸ்பி ஆவார். இவரது மனைவி நாகரத்தினம் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு முதுகுத் தண்டில் அறுவை சிகிச்சை நடந்திருப்பதால், இவரால் நடக்க முடியாது.

வெள்ளிக்கிழமை இரவு இவர்கள் கதவை சாத்திவிட்டு தாழ்ப்பாள் போடாமல் தூங்கிய போது, நள்ளிரவில் இரண்டு மர்ம நபர்கள் வீட்டுக்குள் வந்து, போர்வையால் இருவரையும் கட்டிப்போட்டுவிட்டு, நாகரத்தினத்தின் தாலி, வளையல், தோடு மற்றும், பீரோவில் இருந்து 30 பவுன் நகை, 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.  இது குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.