தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பிரவசத்துக்குப் பின் தாய், குழந்தை மரணம்: மருத்துவமனை ஊழியர் 3 பேர் மீது வழக்கு

மதுரை கரும்பாலை பகுதியைச் சேர்ந்தவர் ஈச்சமுத்து.இவரது மனைவி முத்துமாரி (29). கர்ப்பிணியான இவரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில்

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:46 pm

ஜெயப்பாண்டி

மதுரையில் பிரசவத்திற்குப் பின்னர் தாய், குழந்தை மரணமடைந்ததை அடுத்து தனியார் மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

மதுரை கரும்பாலை பகுதியைச் சேர்ந்தவர் ஈச்சமுத்து.இவரது மனைவி முத்துமாரி (29). கர்ப்பிணியான இவரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.குழந்தை நீண்டநேரமாகியும் அழுகாமல் இருந்ததால் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில் குழந்தை இறந்துவிட்டது. மேலும், ரத்த அழுத்தம் குறைந்த நிலையில் முத்துமாரியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காத காரணத்தாலே தாய், குழந்தை இறந்ததாக ஈச்சமுத்து குடும்பத்தினர் புகார் கூறினர். இதுதொடர்பாக அண்ணாநகர் போலீஸில் புகாரும் அளிக்கப்பட்டது.அதன்படி தனியார் மருத்துவமனை ஊழியர்கள் மேரி, தனம் மற்றும் ராமசாமி ஆகியோர் மீது அண்ணாநகர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.