பிரசவத்தின் போது தாய், சேய் மரணம் : தனியார் மருத்துவமனை மீது புகார்
மதுரையில் பிரசவத்தின் போது, மருத்துவர்கள் இல்லாமல் பிரசவம் பார்க்கப்பட்டதால், தாய், சேய் இருவரும் மரணம் அடைந்ததாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.


மதுரையில் பிரசவத்தின் போது, மருத்துவர்கள் இல்லாமல் பிரசவம் பார்க்கப்பட்டதால், தாய், சேய் இருவரும் மரணம் அடைந்ததாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
மதுரை கரும்பாலையைச் சேர்ந்தவர் ஈச்சமுத்து. இவரது மனைவி முத்துமாரி (29), கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு வெள்ளிக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, பிரசவத்துக்காக அதேப் பகுதியில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
நேற்று பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்ததும், அழவில்லை. குழந்தை அழவில்லை என்று கூறி, தனியார் மருத்துவமனையில் இருந்து தாய், சேய் இருவரையும் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.
ஆனால், அங்கு குழந்தையும், தாயும், சிகிச்சை துவங்கும் முன்னே இறந்துவிட்டனர்.
பிரசவம் பார்த்த போது மருத்துவர் இல்லாமல் பிரசவம் பார்த்ததால் தான் முத்துமாரி உயிரிழந்ததாக, அவரது குடும்பத்தார் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து தனியார் மருத்துவலமனையைச் சேர்ந்த மருத்துவமனை உதவியாளர்கள் மேரி, தனம், ராமசாமி ஆகியோர் மீது மரணத்தை ஏற்படுத்துதால் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...