திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் இயந்திர கோளாறு: 1 மணிநேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது

செங்கோட்டையில் இருந்து சென்னைக்குச் செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் விருதுநகர் ரயில் நிலையத்திற்கு என்றும் வழக்கம் போல் இரவு 9.20-க்கு வரும். ஆனால், இக்குறிப்பிட்ட ரயில் விருதுநகர்

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:41 pm

எஸ். பாண்டியன்

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக சனிக்கிழமை இரவு 1 மணிநேரம் தாமதமாகவே விருதுநகர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.

செங்கோட்டையில் இருந்து சென்னைக்குச் செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் விருதுநகர் ரயில் நிலையத்திற்கு என்றும் வழக்கம் போல் இரவு 9.20-க்கு வரும். ஆனால், இக்குறிப்பிட்ட ரயில் விருதுநகர் அருகே சங்கரலிங்காபுரம் ரயில்வே கேட்டை கடந்து வ்நதபோது திடீரென ரயிலில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.அதையடுத்து, மிகக் குறைந்த வேகத்திலேயே ரயிலை இயக்கி விருதுநகர் ரயில் நிலையத்திற்கு இரவு 10.40-க்கு கொண்டு வந்தனர். அதையடுத்து, ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் பொறியாளர் உள்ளிட்டோருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, ரயில் நிலையத்தில் பணியாளர்கள் தயார் நிலையில் இருந்ததால்  இயந்திரத்தில் இருந்த பழுதை உடனே நீ்க்கம் செய்தனர். அதன் பின்னர் 11.20-க்கு ஒரு மணிநேரம் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றது. இதனால், இரவில் ரயில் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.