திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

குடும்பத் தகராறில் ஆயுதடைப்படை காவலர் விஷமாத்திரை அருந்தி தற்கொலை

அருப்புக்கோட்டை காந்தி நகரைச் சேர்ந்த காளிப்பிள்ளையின் மகன் சரவணன்(34). இவர் அருப்புக்கோட்டையில் ஆயுடைப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:41 pm

எஸ். பாண்டியன்

அருப்புக்கோட்டையில் குடும்பத்தகராறு காரணமாக பன்றிக்கு வைக்கும் விஷமாத்திரையை உட்கொண்டு ஆயுதப்படை போலீஸார் தற்கொலை செய்து கொண்டார்.

அருப்புக்கோட்டை காந்தி நகரைச் சேர்ந்த காளிப்பிள்ளையின் மகன் சரவணன்(34). இவர் அருப்புக்கோட்டையில் ஆயுடைப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி தங்கப்பொண்ணு(26), ஒரு மகள் மற்றும் இருமகன்கள் உள்ளனர். இவர் ஓய்வு நேரங்களில் வீட்டுக்குச் செல்லாமல் அவரது தோட்டத்தில் பணிகளை பார்த்து விட்டு தாமதமாகவே செல்வராம். இதனால், இருவருக்கும் குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

இதேபோல் தான் சனிக்கிழமை இரவும் தாமதமாக வந்தாதால், அவரது மனைவி தங்கப்பொண்ணு(26)பிரச்னை செய்துள்ளார். இதனால் நிம்மதியிழந்த சரவணன், வீட்டிற்குள் சென்று தோட்டப் பயிர்களை பாதுகாப்பதற்காக வாங்கி வைத்திருந்த பன்றி மாத்திரையை உட்கொண்டுள்ளார். இது குறித்து தெரிய வந்ததும் உடனடியாக அருப்புக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் தங்கப்பொண்ணு புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.