திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மகன் உடல் நிலை சரியில்லாததால் தந்தை தூக்கிட்டு சாவு

விருதுநகர் அருகே அல்லம்பட்டி பாராதி நகரைச் சேர்ந்தவர் முத்தையா(28). இவருக்கு அனுசுயா என்ற மனைவியும், முத்துக்குமார்(4) என்ற குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் இவரது மகனுக்கு அடிக்கடி உடல்

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:40 pm

எஸ். பாண்டியன்

விருதுநகரில் மகன் உடல் நிலை அடிக்கடி சரியில்லாததால் மனம் வெறுத்த தந்தை தூக்கிட்டு உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே அல்லம்பட்டி பாராதி நகரைச் சேர்ந்தவர் முத்தையா(28). இவருக்கு அனுசுயா என்ற மனைவியும், முத்துக்குமார்(4) என்ற குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் இவரது மகனுக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. இதனால், விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே கடந்த 3-ம் தேதி மருத்துவமனைக்கு வந்து மகனின் நிலை குறித்து மனைவியிடம் கேட்டறி்ந்து வீட்டிற்குச் சென்றாராம்.

இந்நிலையில் அனுசுயா குழந்தைக்கு சிகிச்சை முடிந்ததும் இன்று வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டை திறந்து பார்க்கையில் தனது கணவர் தூக்கிட்டு உயிரிழந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.