திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விருதுநகரில் நடிகர் விஷால் நடித்த பாண்டிய நாடு படப்பிடிப்பு: பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்

விருதுநகரில் பழைய பேருந்து நிலையம் முன்பு தேசபந்து மைதானத்தி்ல் நடிகர் விஷால் தயாரிப்பில் உருவாகும் பாண்டிய நாடு சினிமா படப்பிடிப்பிற்காக தயார் நிலையில் வந்தனர். அப்போது, நகராட்சியில்

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:39 pm

எஸ். பாண்டியன்

விருதுநகரில் நடிகர் விஷால் கதநாயகனாக நடிக்கும் பாண்டிய நாடு என பெயரிடப்பட்டுள்ள சினிமா படத்தின் படப்பிடிப்பு இன்று நடைபெற்றது. 

விருதுநகரில் பழைய பேருந்து நிலையம் முன்பு தேசபந்து மைதானத்தி்ல் நடிகர் விஷால் தயாரிப்பில் உருவாகும் பாண்டிய நாடு சினிமா படப்பிடிப்பிற்காக தயார் நிலையில் வந்தனர். அப்போது, நகராட்சியில் இருந்து அனுமதி பெறாமல் படப்பிடிப்பை நடத்தக் கூடாது என அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து, விஷால் தரப்பிலிருந்து ஏற்கனவே தலைமைச் செயலகத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இங்கும் அனுமதி பெறவேண்டும் என தெரிவித்ததை அடுத்து நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் என நிர்ணயம் செய்து 8 நாள்களுக்கான கட்டணத்தை மொத்தமாக செலுத்தி அனுமதி பெற்றனர்.

அதையடுத்து, தெப்பக்குளம் அருகே காமராஜர் நினைவில்லம் முன்பு பாடல் காட்சியின் படபிடிப்பு நடைபெற்றது. பின்னர் தேசபந்து மைதானம், தெப்பக்குளம், பாவாலி சாலை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படபிடிப்பை  விருதுநகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.