திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மூடப்பட்ட பட்டாசு ஆலைகள் மீண்டும் தொடங்க நடவடிக்கை :அமைச்சர் பச்சைமால்

விருதுநகர் மாவட்டத்தில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றாததால் மூடப்பட்ட ஆலைகளில் மீண்டும் மேற்கொண்டால் மாவட்ட நிர்வாகம் மூலம் மீண்டும் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:39 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றாததால் மூடப்பட்ட ஆலைகளில் மீண்டும் மேற்கொண்டால் மாவட்ட நிர்வாகம் மூலம் மீண்டும் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமால் தெரிவித்தார்.

சிவகாசியில் உள்ள தனியார் அரங்கத்தில் அனைத்து பட்டாசு உரிமையாளர்கள், தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுடனான விபத்து தடுப்பு குறிப்பு கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்தார். இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில் செய்தி மற்றும் சிறப்பு செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:

விருதுநகர் மாவட்டத்தில், சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலைகளில் 3 லட்சம் தொழிலாளர்கள் நேர்முகமாகவும், 2 லட்சம் பேர் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பாதுகாப்பான முறையில் பணியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்கள் தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். பட்டாசு ஆலையில் விபத்து நடக்க வேண்டும் என்று யாரும் விரும்பிச் செய்வது கிடையாது. எனவே விதி முறைமீறல் போன்ற காரணங்களால் விபத்து நேரிடுகிறது. தொழில் வளம் பெருக வேண்டும், தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிமேற்கொள்ள வேண்டும் என்பதே முதல்வரின் எண்ணமாக உள்ளது.

மேலும், முதலிபட்டி பட்டாசு ஆலை வெடிவிபத்து சம்பவத்துக்கு பின் இப்பகுதிகளில் சாலை மேம்பாட்டுக்காக ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகிறது. சிவகாசியில் ரூ.4.5 கோடியில் சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்கியும் உள்ளார். தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதுகாப்புடன் பணியாற்றுவதற்கு பயிற்சி அளிப்பதற்காக ரூ.1 கோடியில் பயிற்சி அமைக்கவும் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமால் பங்கேற்று பேசுகையில், பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படாத வகையிலும், தொழிலாளர்கள் பாதுகாப்புடன் பணிகள் மேற்கொள்ளவும் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோர் ஏற்றம் பெருகும் வகையில் முதல்வர் தலைமையிலான அரசு செய்து வருகிறது. இந்தியாவிலேயே தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதற்கு காரணம் முதல்வரின் கடினமான உழைப்பாகும். தொழில் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக ரு.26 கோடியில் தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்கு அந்தந்த நிறவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செயதுள்ளார். தென்மாவட்டங்களில் தொழில் துறையில் பின்தங்கிய பகுதியாக இருப்பதால், ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் பூங்காக்கள் உருவாக்க ஆணையிட்டு பணிகள் நடந்து வருகிறது.அதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழில் விபத்தின்றி சிறப்பாக நடைபெற வேண்டும். தற்போது வரையில் பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்காத பட்டாசு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் மூலம் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆலைகளில் விதிமுறைகள் மேற்கொள்ளப்பட்டவுடன் மீண்டும் தொடங்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் தொழில் துறை அமைச்சர் பச்சைமால் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் செயலர் மோகன்பியாரே, மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் அய்யலு,  சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.பாண்டியராஜன்(விருதுநகர்), பொன்னுப்பாண்டியன்(ஸ்ரீவில்லிபுத்தூர்), டான்பாமா சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆசைதம்பி உள்ளிட்ட பொதுமக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.