மதுரை சிந்தாமணி, புதுத்தெருவைச் சேர்ந்த ராஜய்யா என்பவரின் மகன் டூல்ஸ் பாண்டி(29). இவர் மீது மதுரை கரிமேடு, விருதுநகர் கிழக்கு, மேற்கு காவல் நிலையங்கள், பாண்டியன் நகர், சூலக்கரை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பெண்களை வழிமறித்து நகைகளை வழிப்பறி செய்தது, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக 8 வழக்குகள் வரையில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஜூன்-22ம் தேதி வாகன தணிக்கையின் போது இரவில் பிடிபட்டார். அப்போது விசாரித்ததில் குறிப்பிட்ட வழக்குகளில் தொடர்புடையவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர் அளித்த தகவலின் பேரில் அவரது வீடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைத்திருந்த 29 சவரன் நகையையும் பறிமுதல் செய்தனர்.