ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது ரோசல்பட்டி கிராமம். இக்கிராமத்தில் அருகில் உள்ள கண்மாய் கால்வாய் வரத்து தூர்வாரும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு


தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 1 மாதமாக கூலி வழங்கதாதையும், குறைவாக வழங்குவதைக் கண்டித்தும் விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ரோசல்பட்டி கிராம மக்கள் இன்று முற்றுகையிட்டனர்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது ரோசல்பட்டி கிராமம். இக்கிராமத்தில் அருகில் உள்ள கண்மாய் கால்வாய் வரத்து தூர்வாரும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாகவே கூலி வழங்கவில்லையாம். அப்படியே வழங்கினாலும் குறைவாகவே வழங்குவதாகவும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், வழக்கம் போல் பணிக்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கு வேலை செய்வதற்கான பொருள்களை போட்டுவிட்டு கடந்த 1 மாதமாக கூலி வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தி்ல ஈடுபட்டனர்.
இதையடுத்து, கிராம மக்கள் அனைவரையும் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டரங்கத்தில் வைத்து ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, கூலி குறைவாக வழங்குவதாகவும், அதையும் சரியான நேரத்தில் வழங்குவதி்லலையென தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர். பின்னர் அவர்களிடம் ஒன்றியக் குழு தலைவர் பேசுகையில், இத்திட்டத்தில் குறிப்பிட்ட அளவு வேலை செய்தால் தான் முழு அளவு கூலி வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.இல்லையென்றால் எந்த அளவிற்கு பணியில் ஈடுபட்டுள்ளார்களோ, அதற்கேற்ப கூலி வழங்கப்பட்டு வருகிறது. அதனால், இனி வரும் காலங்களில் குறிப்பிட்ட அளவு கட்டாயம் தொழிலாளர்களை வேலை வாங்குவதற்கும் அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், இது குறித்து விவரமாக எடுத்துரைத்தார். அதையடுத்து, பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...