தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகேயுள்ள தெற்குவீரபாண்டியாபுரம் டி.குமாரகிரியை சேர்ந்த ராமசுப்பு மகள்ரூபிகா(17), தூத்துக்குடி கால்டுவெல் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டுபடித்து வந்தார். கடந்த 18.12.2010 அன்று குப்பைகளை கொட்டுவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்ற ரூபிகா திடீரென மாயமானார். இந்நிலையில், அவரது பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தபோதுகிராமத்தின் மேற்கு பகுதியில் உள்ள கால்வாய் பகுதியில் ரூபிகா சடலமாக கிடந்தார். அவர் அணிந்து இருந்த ஆடைகள் கிழிந்து இருந்தன. உடலில் பலஇடங்களில் நகக் கீறல்கள் இருந்தன.